வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை அதிரடி வீரரான கிறிஸ் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை. 11வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது இன்று ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவனை 5 கோடியே 40 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது. ஆனால் ஷிகர் தவனை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி ஹைதராபாத் அணி தக்கவைத்தது. சென்னை அணியின் செல்ல பிள்ளையாக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை அணி கழட்டிவிட்டது இதையடுத்து அஷ்வினை எடுப்பதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது இறுதியில் 7 கோடியே 60 லட்சத்துக்கு பஞ்சாப் அணி எடுத்தது. இதையடுத்து மும்பை அணியில் விளையாடிய போலார்டு ஏலம் விடப்பட்டார். கீரன் போலார்டை 5 கோடியே 40 லட்சத்துக்கு டெல்லி அணி எடுத்தது ஆனால் அவர் ஏற்கனவே மும்பை அணியில் இருப்பதால் ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி அதே விலைக்கு மும்பை அணி எடுத்தது. இதையடுத்து ஏலம் விடப்பட்ட கிறிஸ் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை. அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தற்போது ஃபார்மில் இல்லாமல் தவித்த...
Comments
Post a Comment